May 26, 2024

எந்த மாநில முதல்வர் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்றுள்ளார்? சீமான் கேள்வி

முதலீடுகளை ஈர்க்க இதுவரை எந்த மாநில முதல்வர் வெளிநாடு சென்றுள்ளார் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள தொழிலதிபர்களை சந்தித்து முதலீடுகளை ஈர்க்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்தியாவில் வேறு எந்த மாநில முதல்வரும் முதலீடுகளை ஏற்க வெளிநாடு சென்றதுண்டா என்றும், தமிழக முதல்வர் மட்டும் இரண்டு ஆண்டுகளில் இரண்டு முறை வெளிநாடு சென்றுள்ளார் என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!