May 11, 2024

முதன்முறையாக பிரபல இசையமைப்பாளருடன் இணையும் சிவகார்த்திகேயன்

சினிமா: சிவகார்த்திகேயன் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க, இயக்குனர் மிஷ்கின் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படம் ஆகஸ்ட் 11ம் தேதி திரைக்கு வர உள்ளது.

இதையடுத்து கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மூலம் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். ரங்கூன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார்.

இதுவரை அனிருத், டி.இமான், யுவன் ஷங்கர் ராஜா, ஹிப்ஹாப் தமிழா ஆகியோரின் இசையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இந்தப் படத்தில் முதல்முறையாக சிவகார்த்திகேயனுடன் இணையவுள்ளார் ஜி.வி.பிரகாஷ். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!