டீ குடிப்பது என்பது வெறும் நீர்ச்சத்தை மட்டும் தருவது அல்ல. அது பலரின் வாழ்வில் ஒரு சடங்காகவும், அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளது. கிரீன் டீ, மாட்சா போன்றவை இன்றைய காலத்தில் பிரபலமானாலும், பாரம்பரியமான மசாலா டீ இந்தியாவில் எப்போதுமே மிகவும் விரும்பப்பட்ட பானமாக உள்ளது.

மசாலா டீயில் சேர்க்கப்படும் தேயிலைத் தூள்கள் மற்றும் மூலிகைகள் நறுமணத்தையும் சுவையையும் அளிப்பதோடு மட்டுமல்லாமல், உடல், மனம் மற்றும் ஆன்மாவுக்கு ஆரோக்கிய நன்மைகளை தருகின்றன. குறிப்பாக இலவங்கப்பட்டை, ஏலக்காய், இஞ்சி போன்ற மசாலாப் பொருட்கள் உடலை சூடேற்றுவதோடு, வளர்சிதை மாற்றத்தையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றன.
மசாலா டீயில் சேர்க்கப்படும் முக்கிய பொருட்கள் மற்றும் நன்மைகள்
- கருப்பு மிளகு – உடலுக்கு வெப்பம் தரும், ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்தும், வீக்கம் குறைக்கும், ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகள் கொண்டது.
- இஞ்சி – அஜீரணத்தை போக்கும், குமட்டலைக் குறைக்கும், மூட்டு வலி, வீக்கம் குறைக்கும், சுவாச மண்டலத்தை சீராக்கும்.
- துளசி – நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், சளி, இருமல் மற்றும் பருவ நோய்களைத் தடுக்கும்.
- அதிமதுரம் – தொண்டை வலியை குறைக்கும், சுவாச பாதையை சுத்தப்படுத்தும்.
- குங்குமப்பூ – இதயத்தை பாதுகாக்கும், மனநிலையை உயர்த்தும், சுவை, நிறம், நறுமணத்தை தரும்.
- ஏலக்காய் – செரிமானத்தை எளிதாக்கும், இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும், சுவாசத்தை புத்துணர்ச்சி தரும்.
- இலவங்கப்பட்டை – இரத்த சர்க்கரை கட்டுப்படுத்தும், இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும், பாக்டீரியாக்களை எதிர்க்கும்.
- கிராம்பு – நோய் எதிர்ப்பு சக்தி, வாய்வழி ஆரோக்கியம் மேம்படும், ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது.
- பெருஞ்சீரகம் – செரிமானத்தை மேம்படுத்தும், வயிற்று உப்புசத்தை குறைக்கும், சுவாசத்தை புத்துணர்ச்சி தரும்.
- ஓமம் – அஜீரணத்தை சரி செய்யும், வாயு, வீக்கம் நீக்கும், மூக்கு அடைப்பு மற்றும் சளியை சரி செய்யும்.