வாஷிங்டன்: அமெரிக்கா மற்றும் உலகின் விண்வெளி ஆய்வாளர்கள், ஒவ்வொரு வினாடியும் 600 கோடி டன் துாசி மற்றும் வாயு பொருட்களை விழுங்கி மிக வேகமாக வளர்ந்து வரும் புதிய இளம் கோளை கண்டுபிடித்துள்ளனர். இதற்கு ‘சா 1107 – 7626’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சாதாரணமாக கோள்கள் ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி பயணம் செய்வதைக் காணலாம், ஆனால் இந்த கோள் தனியாக நட்சத்திரம் இல்லாமல் விரிவடைந்து வருகிறது. கடந்த சில மாதங்களில், அது அகோர பசியுடன், சுற்றியுள்ள அனைத்து பொருட்களையும் தன்னுள் ஈர்த்து கொண்டுள்ளது. இதன் வேகம் மற்றும் அளவு, இதுவரை விண்வெளியில் பார்க்கப்படாத புதிய அளவாகக் கருதப்படுகிறது.
விஞ்ஞானர்கள், இந்த கோள் வளர்ச்சி நட்சத்திரங்களின் உருவாக்கத்தைப் போலவே அதன் காந்தப் புலத்தால் தூண்டப்படுவதாக நம்புகிறார்கள். இதன் கண்டுபிடிப்பு விண்வெளி ஆராய்ச்சியில் பெரிய மைல்கல் ஆகும்.
இதன் மேல் கண்காணிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விஞ்ஞானிகள், இந்த தனித்துவ கோளின் வளர்ச்சி மற்றும் அதன் தாக்கங்களை பற்றி விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.