ஸ்விக்கி நிறுவனம் அதன் ஊழியர்களுக்கான பங்கு உரிமை திட்டம் (ESOP) மூலம் 500க்கும் மேற்பட்ட ஊழியர்களை கோடீஸ்வரர்களாக மாற்றியுள்ள து.
ஸ்விக்கி கடந்த நவம்பர் 13, 2024-இல் ஐபிஓ மூலம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. இந்நிறுவனத்தின் பங்குகள் ₹390 என்ற விலையில் வெளிவந்து, பட்டியலிடும் போது 7.7% பிரீமியத்தில் ₹420 என்ற விலையில் வர்த்தகமாகியது. ESOP மூலம், ஊழியர்களுக்கு பங்குகள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு, பங்குகளின் மதிப்பு அதிகரிக்க வந்ததால், பல ஊழியர்கள் கோடீஸ்வர்கள் ஆகினர்.
ESOP திட்டம், நிறுவனத்தில் நீண்டகாலமாக பணியாற்றும் ஊழியர்களுக்கு பங்குகளை வழங்கி அவர்களை நிறுவனத்தில் பற்று ஏற்படுத்துவதற்கான ஒரு வழி. இந்த திட்டத்தின் கீழ், ஸ்விக்கி 231 மில்லியன் பங்குகளை ஒதுக்கி, ₹9,046.65 கோடி மதிப்பில் ஊழியர்களுக்கு வழங்கியுள்ளது. இதன் மூலம் சுமார் 500 ஊழியர்கள் கோடீஸ்வர்களாக மாறியுள்ளனர்.
இந்த நிகழ்வு ஸ்விக்கி போன்ற தொடக்க நிறுவனங்களில் ஊழியர்களுக்கு நற்பெயர் மற்றும் நிறுவன வெற்றியில் பங்கு கொள்வதற்கான முக்கிய நடவடிக்கையாகும்.