சென்னை: பிறகட்சியிலிருந்து விலகி வந்து இணைந்தவர்களுக்கு தவெகவில் முக்கிய நிர்வாக பொறுப்பு வழங்கப்படுகிறது.
நடிகர் விஜய் தனது சினிமா கேரியரில் கடைசி படத்தை அறிவித்து விட்டு அரசியல் கட்சி தொடங்கினார். பல்வேறு விமர்சனங்கள் வந்த போதும் தவெக கட்சிக்கு இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் பிற கட்சிகளில் இருந்து விலகி தவெகவில் இணைபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு முக்கிய நிர்வாக பொறுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் கட்சியில் இணைந்த ஆதவ் அர்ஜுனாவுக்கு தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் மற்றும் நிர்மல்குமாருக்கு துணை பொதுச்செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட்டது. இதையடுத்து லயோலா மணி, பேராசிரியர் சம்பத்குமார், கேத்ரின் பாண்டியன் ஆகியோர்க்கு கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் பொறுப்பும், வீரவிக்னேஷ்வரன் என்பவருக்கு செய்தித் தொடர்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.