கரூரில் நடந்த கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தால் விஜய் கடும் விமர்சனத்தில் சிக்கியிருக்கிறார். அதோடு அவர் பாதிக்கப்பட்ட குடும்பங்களை இன்னும் நேரில் சந்திக்காததும், அவரின் “தமிழக வெற்றிக் கழக” இமேஜுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதே சமயம், திரைத்துறையிலும் அவர் சில மூத்த நடிகர்களை அவமதித்ததாக புதிய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
விஜய், நெப்போலியனை “போக்கிரி” படப்பிடிப்பின்போது கடுமையாகப் பேசி அசிங்கப்படுத்தியதாக நீண்ட நாட்களாகவே பேச்சு உள்ளது. இதை நெப்போலியனும் சில பேட்டிகளில் ஒப்புக்கொண்டுள்ளார். இப்போது அதேபோல் நடிகர் ராதாரவி அளித்த பழைய பேட்டி ஒன்று மீண்டும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

அந்த பேட்டியில் ராதாரவி கூறியதாவது – “சர்கார்” படத்தின் போது எனது பேரன் விஜய்யின் ரசிகன் என்பதால் அவரை சந்திக்க விரும்பினார். அதை அவரின் பி.ஏ.விடம் கூறியபோது, விஜய் மேக்கப்பில் இருக்கும்போது ஃபோட்டோ எடுக்கமாட்டார் எனக் கூறிவிட்டார்கள். பின்னர் குடும்பத்தோடு விஜயை வீட்டில் சந்தித்தோம். ஆனால் சில நாட்களுக்கு பிறகு விஜயை மீண்டும் பார்க்க முயன்றபோது, ‘அன்று போல கூட்டம் கூட்டி வர வேண்டாம்’ என அவரின் பி.ஏ. கூறியதாக தெரிவித்தார். இதனால் ராதாரவி வராமல் விட்டதாக கூறியுள்ளார்.”
இவ்வாறு ராதாரவியின் கருத்து வெளிவந்ததால், விஜய் மீது “தலைக்கனம் பிடித்தவர்” என்ற விமர்சனங்கள் மேலும் அதிகரித்துள்ளன. தற்போது அரசியலிலும் சினிமாவிலும் சர்ச்சைகள் சூழ்ந்துள்ள நிலையில், விஜய் இதற்கு பதில் அளிப்பாரா என்பது ரசிகர்களிடையே கேள்வியாக மாறியுள்ளது.