May 29, 2024

வெகு நேரம் மேக்கப்பை நீடிக்கச் செய்யும் ஸ்பிரே

திருமணம், உள்ளிட்ட முக்கியமான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது வெப்பம், வியர்வை போன்றவற்றால் சில நேரங்களில் மேக்கப் கலைந்துவிடும். இதனை தவிர்த்து, மேக்கப்பை நீண்ட நேரம் நீடிக்கச் செய்வதற்கு உதவுவதுதான் ‘செட்டிங் ஸ்பைரே’. இதன் மூலம், 16 மணி நேரம் வரை மேக்கப் கலையாமல் பாதுகாக்கலாம்.

தண்ணீர், ஆல்கஹால் பராமரிப்பு மற்றும் இதர சருமப் பொருட்கள் கலந்த திரவம்தான் ‘செட்டிங் ஸ்பைரே’. முழுவதுமாக மேக்கப் போட்டு முடித்த பின்பு, இதனை ஆங்கில எழுத்து ‘T’ அல்லது ‘X’ வடிவ இயக்கத்தில் முகத்தின் மேல் ஸ்பைரே செய்ய வேண்டும். இதன் மூலம் அந்த திரவம் மெல்லிய படலம் போல படியும். அது மேக்கப்பை கலையாமல் பாதுகாக்கும்.

செட்டிங் ஸ்பைரே’ அடிப்படையில் பல வகைகளில் தயாரிக்கப்படுகிறது. உங்கள் சருமத்தின் தன்மை, நீங்கள் போடும் மேக்கப்பின் வகை, எஸ்.பி.எப் அளவை பொருத்து அதை தேர்வு செய்யலாம். தண்ணீர் மூலக்கூறுகள் அதிகம் உள்ள செட்டிங் ஸ்பைரே, வறட்சியான சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். மேக்கப் செதில் செதிலாக உதிர்ந்து வருவதையும் தடுக்கும். இதுபோலவே எண்ணெய்ப்பசை உள்ள சருமம் மற்றும் காம்பினேஷன் சருமம் கொண்டவர்களுக்கு ஏற்ற வகையில் செட்டிங் ஸ்பிரேக்கள் உள்ளன.

ஹேர் ஸ்பிரே’ சிகை அலங்காரத்தைக் கலையாமல் பாதுகாக்கும். ‘டாப் கோட்’ எனும் வகை ஸ்பிரே, நெயில் பாலிஷை நீண்ட காலம் நீடிக்கச் செய்யும். செட்டிங் ஸ்பிரேவை முகத்தில் தெளித்தவுடன் உடனடியாக உலர வைப்பதற்காக கைகளால் தொடுவது, தடவுவது போன்றவற்றை செய்யக்கூடாது. தானாக உலரும் வரை காத்திருக்க வேண்டும். செட்டிங் ஸ்பிரேவில் எஸ்.பி.எப் இருப்பதால், இதை சன் ஸ்கிரீனுக்குப் பதிலாகப் பயன்படுத்தலாம்.

லிப்ஸ்டிக், ஐ லைனர், ஐ ஷேடோ ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது செட்டிங் ஸ்பிரேவை உபயோகிக்கலாம். கண்களுக்கான மேக்கப் டிப்ஸ் கண்களுக்கு எளிமையான மேக்கப், உங்கள் முகத்தின் அழகை மேம்படுத்தும். கண்களுக்கு மேக்கப் செய்வதற்கு முன்பு ‘பிரைமர்’ பயன்படுத்துவது முக்கியம்.

அது உலர்ந்த பிறகு ஐ ஷேடோ, பேஸ் பவுண்டேஷன் அல்லது கன்சீலர் உபயோகிக்கலாம். ஐ லைனர் மற்றும் ஐ ஷேடோவில் மினுமினுப்பானதாக இல்லாமல், தினசரி உபயோகத்துக்கு உதவும் நிறங்களை தேர்வு செய்வது நல்லது. உங்கள் சரும நிறத்துக்கு ஏற்ற ‘ஹைலைட்டர்’ பயன்படுத்துவது மேக்கப்பை மேம்படுத்தும்.

முகத்துக்கு மேக்கப் போடுவதற்கும், கண்களுக்கும் ஒரே பிரஷ்சை பயன்படுத்தக்கூடாது. சிறிய ஐ ஷேடோ பிரஷ், பிளெண்டிங் பிரஷ், ஸ்மட்ஜர் பிரஷ் போன்றவற்றை வைத்திருப்பது அவசியம். ஒவ்வொரு முறையும் பிரஷ்ஷில் மேக்கப் பொருட்களை எடுக்கும்போது, அதிகப்படியாக உள்ள துகள்களை அகற்றிய பின்பு உபயோகப்படுத்துவது முக்கியம். கண்களுக்கான மேக்கப்பில் பீச், இளஞ்சிவப்பு அல்லது வெளிர் ஆரஞ்சு நிறங்களை பயன்படுத்தலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!