ஜெருசலேம்: இஸ்ரேல் மீது ஹமாஸ் தலைமையிலான ஆயுதக் குழுக்கள் நடத்திய தாக்குதலுக்கு 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களுக்கு இஸ்ரேல் முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
2023 அக்டோபர் 7-ம் தேதி நடைபெற்ற தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், 251 பேர் பிணைக்கைதிகளாக காசாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதலின் நினைவு நாளையொட்டி இஸ்ரேலில் பல்வேறு நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குறிப்பாக Nova இசை விழா நடைபெற்ற பகுதியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.
இதன் தொடர்ச்சியாக காசாவில் ஏற்பட்ட போர் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. பல பகுதிகள் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன், லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினைக்கு நீடித்த அரசியல் தீர்வு காண வேண்டும் என உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
