கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற ‘உலகின் மிக அசிங்கமான நாய்’ போட்டியில் 6 வயது பக் இனத்தைச் சேர்ந்த ஜின்னி லூ வெற்றி பெற்றது.
சாண்டா ரோசாவில் நடைபெற்ற போட்டியில் வித்தியாசமான தோற்றம் கொண்ட நாய்கள் பங்கேற்றன. தொடர்ந்து நான்காவது முறையாக போட்டியில் பங்கேற்ற ஜின்னி லூவின் உரிமையாளர் மிஷேல் கிரேடிக்கு சுமார் ரூ.4.77 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.
இரண்டாவது இடம் பிடித்த பிங்கிக்கு ரூ.2.86 லட்சமும், மூன்றாவது இடம் பிடித்த ஓட்டோவுக்கு ரூ.1.91 லட்சமும் வழங்கப்பட்டது.
இந்தப் போட்டி நாய்களை அவமதிப்பதற்காக அல்ல; அவற்றின் தனித்துவத்தை கொண்டாடுவதுடன், நாய்களை தத்தெடுப்பதை ஊக்குவிப்பதே முக்கிய நோக்கமாகும்.
