இன்சியான்: தென்கொரியாவின் இன்சியான் நகரில் உள்ள வணிக வளாகத்தில் நடைபெற்ற கத்திக்குத்துத் தாக்குதலில் எட்டு பேர் காயமடைந்தனர். இதையடுத்து, தாக்குதலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் நபரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
பல தளங்களைக் கொண்ட வணிக வளாகத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலில் காயமடைந்தவர்களில் 20 வயதுகளில் உள்ள பெண் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் அங்கு சென்ற போலீசார், சந்தேக நபரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது உடனடியாகத் தெரியவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
