பூடானில் பனிப்பாறை ஏரிகள் உடைந்து ஏற்படும் திடீர் வெள்ள அபாயத்தை கட்டுப்படுத்த தேசிய அளவில் புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டு பிரதமர் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த குழு, பனிப்பாறை ஏரிகளின் நீர்மட்டத்தை கண்காணிப்பது, அபாயங்களை மதிப்பிடுவது மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும்.
காலநிலை மாற்றத்தால் பனிப்பாறைகள் உருகும் வேகம் அதிகரித்து வருவதால், மலைப்பகுதி நாடுகளில் வெள்ள அபாயம் அதிகரித்துள்ளது.
