தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தில் இருந்து எல்லை தாண்டி மீன்பிடிக்கச் சென்ற 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி அயோனா விமலரத்ன, படகில் இருந்த 12 மீனவர்களுக்கும் தலா ₹1.5 கோடி (இலங்கை பணம்) அபராதம் விதித்தும், கட்ட தவறினால் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. மற்றொரு படகில் இருந்த 10 பேர் மீதும் தொடரப்பட்ட வழக்கில் படகின் உரிமையாளரையும் சேர்க்க வேண்டும் என இலங்கை மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.
அதற்கு இந்திய தூதரகம் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து 10 பேரின் காவலை வரும் 10-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டது.