வாஷிங்டன்: அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 6 பேர் எம்.பி.க்களாக பதவியேற்றுள்ளனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளன.
அமெரிக்க அதிபர் தேர்தலுடன், பிரதிநிதிகள் சபைக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 6 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த சுஹாஸ் சுப்ரமணியம் வர்ஜீனியா மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி நபர் ஆனார். முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஆலோசகராகவும் பணியாற்றினார்.
இந்த எம்.பி.க்களுடன், ஜனநாயகக் கட்சியின் மற்றொரு முக்கிய பிரமுகரான ஸ்ரீ தானேதர் – மிச்சிகன், ராஜா கிருஷ்ணமூர்த்தி – இல்லினாய்ஸ், ரோ கண்ணா – கலிபோர்னியா, அமி பெரா – கலிபோர்னியா, மற்றும் பிரமிளா ஜெயபால் – வாஷிங்டன் ஆகியோர் பதவியேற்றுள்ளனர்.
மேலும், அரிசோனா மாநிலத்தில் ஜனநாயகக் கட்சியின் அமிஷ் ஷா வெற்றி பெற்றார்.
இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்றம் முறையாக செயல்பட தொடங்கியுள்ள நிலையில் இந்த 6 பேரும் எம்.பி.க்களாக பதவியேற்று புதிய பணிகளை தொடங்கியுள்ளனர். பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.