டாக்கா: வங்கதேச விமான நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
வங்கதேச தலைநகர் டாக்காவின் ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் இன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தைத் தொடர்ந்து அனைத்து விமான நடவடிக்கைகளையும் அதிகாரிகள் நிறுத்தி வைத்தனர்.
விமான நிலையத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை சேமித்து வைக்கப் பயன்படுத்தப்படும் இடத்தில தீ விபத்து ஏற்பட்டது.
விமான நிலையத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.