துருக்கி: துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவானது. கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
துருக்கி இஸ்தான்புல் நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவாகியுள்ளது.
அடுத்தடுத்து 3 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கிய நிலையில் மக்கள் அறலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த நிலநடுக்கம் இஸ்தான்புல் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தகவல் வெளியாகவில்லை என கூறப்படுகிறது.