சீனா : சீனாவில் பயணிகள் படகு கவிழ்ந்த விபத்தில் 11 பேர் பலியாகி உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
சீனாவில் பயணிகள் படகுடன் மற்றொரு பெரிய வகைப் படகு மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.
ஹூனான் மாகாணத்தில் உள்ள யுவான்ஷியி நதியில் 19 பேருடன் சென்று கொண்டிருந்த படகும், அந்த வழியாக வந்த எண்ணெய் கசிவு சுத்திகரிப்பு படகும் மோதிக் கொண்டன.
இதில், பயணிகள் படகு நீரில் மூழ்கியதில் 11 பேர் உயிரிழந்தனர். மாயமான 8 பேரில் மூவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 5 பேரை மீட்புக் குழு தேடி வருகிறது.
இந்த சம்பவம் சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து காணாமல் போனவர்களை தேடும் பணிகளும் நடந்து வருகிறது.