கார்ட்டூம்: சூடான் தலைநகரில் ஏற்பட்ட ராணுவ விமான விபத்தில் 10 வீரர்கள் பலியாகி உள்ளனர்.
சூடான் தலைநகர் கார்ட்டூமில் ராணுவ விமானம் விபத்தில் சிக்கியதில் 10 வீரர்கள் உயிரிழந்தனர். கார்ட்டூம் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் இந்த விபத்து நேரிட்டது.
உயிரிழந்த 10 பேரில் பலர் மூத்த ராணுவ அதிகாரிகள் ஆவர். படுகாயமடைந்த பலர் அருகில் உள்ள ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழுந்துவிட்டு எரியும் விமானத்திலிருந்து மீட்கப்பட்ட காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.