பிரயாக்ராஜ்: உத்தரபிரதேசத்தின் புலந்த்சாகரைச் சேர்ந்த அன்சர் அகமது சித்திக். பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பும் வீடியோவை மே 3 அன்று சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார்.
இது தொடர்பாக, புலந்த்சாகர் காவல் நிலையத்தில் சித்திக் மீது PNS சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார்.

அதைத் தொடர்ந்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் சித்திக் சார்பாக ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, நீதிபதி ஜாமீன் மனுவை நிராகரித்தார்.
நீதிபதி, “தேச விரோத மனப்பான்மை கொண்டவர்களின் இத்தகைய செயல்களை நீதிமன்றங்கள் பொறுத்துக்கொள்வதால், இதுபோன்ற குற்றங்கள் ஒரு வழக்கமாகி வருகின்றன. எனவே, ஜாமீன் வழங்க முடியாது” என்றார்.