பிரேசில். பிரேசில் பாஸ்கட்பால் ஜாம்பவான் லாமீர் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு அனைத்து தரப்பு மக்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரேசில் நாட்டின் பாஸ்கட்பால் ஜாம்பவான்களில் ஒருவரான லாமிர் மார்கிஸ் (87) காலமானார். 1959, 1963ஆம் ஆண்டுகளில் உலகக்கோப்பை பாஸ்கட்பால் சாம்பியன் பட்டத்தை பிரேசில் அணி வென்றபோது, அந்த அணிகளில் மார்கிஸ் இடம்பெற்றிருந்தார்.
மேலும், 1960, 1964ஆம் ஆண்டுகளில் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பிரேசில் நாடு வெண்கலம் வென்றபோதும் அந்த அணிகளில் அவர் இருந்தார்.
வயோதிகம் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவர் காலமானார். அவரது மறைவிற்கு விளையாட்டு வீரர்கள் மட்டுமே அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.