நியூயார்க்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 5 நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் 10 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகள் உள்ளன. அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய 5 நிரந்தர உறுப்பு நாடுகள்.
இந்த நாடுகளுக்கு வீட்டோ அதிகாரம் உள்ளது. இரண்டு ஆண்டுகள் மட்டுமே பதவிக் காலம் கொண்ட நிரந்தரமற்ற உறுப்பு நாடுகள் மட்டுப்படுத்தப்பட்ட செல்வாக்கைக் கொண்டுள்ளன. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்க வேண்டும் என மத்திய அரசு நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது.
இதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முழு ஆதரவு தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் புடினும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று நடந்த ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பேசுகையில், ”இந்தியா, ஜெர்மனி, ஜப்பான், பிரேசில், இரண்டு ஆப்ரிக்க நாடுகளுக்கு, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் வழங்க வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் நேற்று அவர் பேசுகையில், “ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவாக்குங்கள்.
பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா, பிரேசில், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் இரண்டு ஆப்ரிக்க நாடுகளுக்கு நிரந்தர இடம் வழங்க வேண்டும்,” என வலியுறுத்தினார்.
ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக உள்ள அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய 4 நாடுகள் அளித்துள்ளன. ஆனால், சீனா மட்டும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சீனாவின் எதிர்ப்பையும் மீறி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.