ஜோர்டான்: பிரிட்டன் இளவரசர் ஹாரி, மனைவியுடன் ஜோர்டானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
காசா போரின்போது காயமடைந்து ஜோர்டான் நாட்டில் சிகிச்சை பெற்றுவரும் பாலஸ்தீனர்களை, பிரிட்டன் இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும் சந்தித்து நலம் விசாரித்தனர்.
அதை தொடர்ந்து, உலக சுகாதார மையத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இருவரும் கலந்துகொண்டனர். காசா போரால் ஜோர்டானில் தஞ்சமடைந்த பாலஸ்தீனர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது குறித்து அங்கு விவாதிக்கப்பட்டது.