பெய்ஜிங்கில் இருந்து வந்த தகவலின்படி, அமெரிக்காவின் டாலர் ஆதிக்கத்தை குறைக்கும் முயற்சியில் சீனா புதிய பரிவர்த்தனை அமைப்பை உருவாக்கியுள்ளது. சிப்ஸ் எனப்படும் இந்த அமைப்பை கொண்டு நாடுகள் தங்களது சொந்த கரன்சியில் நேரடியாக பண பரிமாற்றம் செய்ய முடியும்.

இன்று உலகத்தில் பண பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்படும் ஸ்விஃப்ட் முறையில் அதிக கட்டணமும், மேற்கத்திய நாடுகளின் கட்டுப்பாடும் உள்ளன. இதனால் சீனா தனக்கென ஒரு சுயாதீன அமைப்பை உருவாக்க முடிவு செய்தது.
சிப்ஸ் அமைப்பின் மூலம் இந்தியா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்க டாலரை மத்தியிலே கொண்டு வராமல், நேரடியாக சொந்த நாணயத்தில் பரிமாற்றம் செய்ய முடியும். இதன் மூலம் பண பரிமாற்ற கட்டணமும் குறையக்கூடும்.இந்த அமைப்பை முதலில் ஷாங்காயில் முழுமையாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஷாங்காயின் முக்கிய வணிக நிறுவனங்கள் இதை பயன்படுத்தத் துவங்கியுள்ளன.சிறு நிறுவனங்கள் கூட இந்த அமைப்பின் மூலம் சர்வதேச வர்த்தகம் செய்யலாம். ரூ.3000 என்ற குறைந்த தொகையையும் பரிமாற்றம் செய்ய முடியும்.தற்போது உலகம் முழுவதும் 110 நாடுகள் மற்றும் 1300க்கும் மேற்பட்ட வங்கிகள் சிப்ஸ் அமைப்பில் இணைந்துள்ளன.
இந்தியாவில் ஐசிஐசிஐ மற்றும் எஸ்பிஐ வங்கிகள் இதில் பங்கேற்றுள்ளன.இந்த அமைப்பின் மூலம் ரூபாயை நேரடியாக சீன யுவானாக மாற்ற முடியும். டாலரை மத்தியிலே கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லாது போகிறது.சீனாவின் இந்த முயற்சி அமெரிக்காவின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கக்கூடும் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர். இது உலக பொருளாதார அமைப்பிலும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும்.