பீஜிங்: சீனா மற்றும் அமெரிக்கா இடையே உள்ள வர்த்தகப் போர் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. சீனாவுக்கு எதிராக அமெரிக்கா கடுமையான வரி நடவடிக்கைகளை அறிவித்துள்ள நிலையில், “பிளாக்மெயில் மற்றும் அச்சுறுத்தல் அனுமதிக்க முடியாது” என கண்டித்துள்ளது.

அமெரிக்கா, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கும் வரியை 145 சதவீதத்திலிருந்து 245 சதவீதமாக உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது. இது, சீனாவின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட முடிவாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இந்த பரஸ்பர குற்றச்சாட்டுகளும் வரிவிதிப்புகளும் இருநாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போரை மேலும் தீவிரமாக்கியுள்ளது. அமெரிக்கா, சீனாவை நோக்கி “பிளாக்மெயில் செய்யவும், மிரட்டவும் கூடாது” என வலியுறுத்தியுள்ளது.
இதற்கு பதிலளித்த சீனாவின் வெளியுறவுத்துறை, வர்த்தகப் போரை முதலில் தொடங்கியது அமெரிக்காவே எனக் குற்றம்சாட்டியுள்ளது. சீனாவின் நியாயமான நலன்களையும், சர்வதேச நியாயத்தையும் பாதுகாக்கும் வகையில் தான் தேவையான எதிர்வினைகளை எடுத்ததாக தெரிவித்துள்ளது.
அமேரிக்கா உண்மையில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்கு தீர்வு காண விரும்புகிறதென்றால், அதிக அழுத்தங்கள் மற்றும் மிரட்டல்களை நிறுத்த வேண்டும். சமத்துவம், மரியாதை மற்றும் பரஸ்பர நன்மையின் அடிப்படையில் தான் பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது.