சீனா: சிலருக்கு உடலில் உள்ள நோயெதிர்ப்பு செல்கள் கணையத்தில் உள்ள இன்சுலின் சுரக்கும் செல்களை அழித்துவிடும். இன்சுலினை தானாக சுரக்கும் செல்கள் அழிவதால் மனிதர்களுக்கு டைப் 1 நீரிழிவு நோய் ஏற்படுகிறது.
டைப் 1 நீரிழிவு நோய்க்கு உடலில் இன்சுலின் ஊசி மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் சீன மருத்துவர்கள் எலும்பு மஜ்ஜையை எடுத்து மரபணு மாற்றம் செய்து உடலில் ஊசி மூலம் இன்சுலின் சுரப்பை தூண்டியுள்ளனர்.
இன்சுலின் சுரப்பை ஊக்குவிக்கும் எலும்புகள் சர்க்கரை நோயாளிகள் உடலில் நுழைந்தவுடன், இன்சுலின் சுரக்க ஆரம்பித்துவிட்டது. இன்சுலின் முழுமையாக சுரக்காததால் ஏற்பட்ட டைப் 1 சர்க்கரை நோயை குணப்படுத்தி வெற்றி பெற்றுள்ளனர்.
எலும்பு மஜ்ஜையை மரபணு மாற்றம் செய்து நீரிழிவு நோய்க்கு சிகிச்சை அளித்துள்ளனர்.