புதுடெல்லி: சீனா தனது எலக்ட்ரானிக் பொருட்களில் முக்கியமாக தொலைக்காட்சி, ஃபிரிட்ஜ்களிலும் டீப்சீக் ΑΙ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது என்று தகவல்கள் வெளி வந்து உள்ளன.
சீனாவின் ஹையர், ஹை சென்ஸ், டிசிஎல் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் தங்கள் சாதனங்களில் டீப்சீக் AI டெக்னாலஜியை ஒருங்கிணைத்து வருகின்றன.
புதிய மாடல் டிவி, ஃபிரிட்ஜ்கள், ரோபோ வேக்யூம் க்ளீனர்களை தயாரித்து வருகின்றன. நாம் கட்டளையிட்டாலே இந்த கருவிகள் இனி செயல்படும். ஏற்கனவே ஹூவேய், டென்செண்ட் நிறுவனங்களும் தங்கள் கருவிகளில் டீப்சீக் AI வசதியை கொண்டு வருவதாக அறிவித்துள்ளன.