வாஷிங்டன்: சைபர் தாக்குதல் காரணமாக லாஸ் ஏஞ்சல்ஸ் கோர்ட் மூடப்பட்டது. அங்குள்ள அனைத்து கம்ப்யூட்டர்களும் முடங்கின.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஒருங்கிணைந்த கோர்ட் உள்ளது. இங்கு மொத்தம் 36 விசாரணை கோர்ட்டுகள் செயல்படுகின்றன. இந்த நிலையில் அங்குள்ள கம்ப்யூட்டர்களில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது.
எனவே அங்குள்ள அனைத்து கம்ப்யூட்டர்களும் முடங்கின. இதனையடுத்து பொதுமக்களின் தரவு பாதுகாப்பு கருதி லாஸ் ஏஞ்சல்ஸ் கோர்ட்டு உடனடியாக மூடப்பட்டது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.