அமெரிக்க அதிபராக பதவி ஏற்கும் போதே, தங்களுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு அதே அளவு வரி விதிக்கப்படும் என டொனால்டு டிரம்ப் எச்சரித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, சீனாவுக்கு மீண்டும் மீண்டும் வரி விதித்தார். பதிலுக்கு சீனாவும் வரி விதித்து, இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் தீவிரமாகியது. டிரம்ப் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 245 சதவீதம் வரி விதிக்கப்படும் என அறிவித்தார்.

இந்நிலையில், டொனால்டு டிரம்ப் மீண்டும் கருத்து தெரிவித்து, “வர்த்தகப் போரில் சீனா தான் அதிகமாக பாதிக்கப்படும்” என்றார். அவர் மேலும் கூறியதாவது: “தற்போது பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது. வரி விதிப்பது அவசியமாகிறது. இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் அதிபர் ஜோ பைடனே காரணம். நமது பொருளாதாரம் வளர்ச்சியடைக்கும். அதற்காக சிறிது காலம் எடுத்துக்கொள்ளலாம்.”
அமெரிக்கா சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்கள் மீது பெரிதாக நம்பிக்கை வைக்கவில்லை என்றும், “அமெரிக்க குழந்தைகளுக்கு 30 பொம்மைகள் பதிலாக இரண்டு பொம்மைகள் கிடைக்கக் கூடும். அவை வழக்கத்தை விட இரண்டு டாலர்கள் அதிகம் இருக்கலாம். ஆனால், இந்த வர்த்தகப் போரில் சீனா தான் பெரிய அளவில் பாதிக்கப்படும்” என்றும் டிரம்ப் கூறினார்.