சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் 50 வருட ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. போராளி குழுக்கள் தலைநகரில் நுழைந்ததைத் தொடர்ந்து, ஆசாத் ரகசியமாக விமானத்தில் தப்பிச் சென்றதாக தகவல்கள் வந்துள்ளன.
ஈராக், ஜோர்டான் மற்றும் லெபனான் எல்லையில் உள்ள நாட்டின் மிகப்பெரிய மாகாணமான ஹோம்ஸின் கட்டுப்பாட்டை சனிக்கிழமையன்று கைப்பற்றியதாக ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) தீவிரவாதக் குழு தெரிவித்துள்ளது. நவம்பர் 27 அன்று அது அரசாங்கத்தின் மீது போரை அறிவித்தது.
குழு ஏற்கனவே அங்கு குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றுள்ளது. தீவிரவாதிகள் இப்போது நாட்டின் அதிபர், ராணுவம், தலைநகரில் உள்ள செய்தி சேனல்கள் மற்றும் அரசு கட்டிடங்களை கட்டுப்படுத்துகின்றனர். அடுத்த சில நிமிடங்களில் அவர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் (HTS) என்கிற போராளி குழு அங்கு வெற்றி அடைந்து, சிரியா முழுவதும் தனது கட்டுப்பாட்டை பரப்பியுள்ளது. இக்குழுவை உருவாக்கிய அபு முகமது அல்-ஜோலானி, தனது ராணுவ மற்றும் அரசியல் திறமைகளால் போரில் வெற்றி பெற்று, தற்போது 10க்கும் மேற்பட்ட குழுக்களை ஒன்றிணைத்துள்ளான். சிரியாவின் முக்கிய பகுதிகள் தற்போது போராளி குழுக்களின் கையில் உள்ளது.