ஒரு காலத்தில் உலக நாடுகளில் பாதியை ஆண்ட இங்கிலாந்து, கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக கூறப்படுகிறது. லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இங்கிலாந்துக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் ரூ.1 லட்சத்து 52,304 கோடி கடன் கிடைத்தது.
இந்த தொகை கடந்த ஆண்டை விட ரூ.36,686 கோடி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது கடனுக்குச் சமமாக உள்ளது, எனவே மக்கள் மிகவும் பயப்படுகிறார்கள். பலர் நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வந்து, கெய்ர் ஸ்டார்மர் பிரதமராக பதவியேற்றார். தற்போதைய நிதி நிலை மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர் 30ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் அறிக்கையில் வரி அதிகரிக்கப்படும் என்று நிதி அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து மட்டுமின்றி, ஜப்பான், அமெரிக்கா, கிரீஸ், இத்தாலி உள்ளிட்ட உலகின் பல முன்னணி நாடுகளும் மொத்த உள்நாட்டு உற்பத்தியை தாண்டிய கடன்களைக் கொண்டுள்ளன. இந்தியாவின் கடன் மற்றும் நிகர உள்நாட்டு உற்பத்தி விகிதம் 57.1% என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.