அமெரிக்கா: பிரபல ஹாலிவுட் திரைப்பட பெண் தயாரிப்பாளர் காலமானார்.
பிரபல ஹாலிவுட் படங்களான “ஆல் மை சில்ரன்”, “ரையான் ஹோப்ஸ்”, “அஸ் த வேர்ல்ட் டர்ன்ஸ்” உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர் பெலிசியா மினி பெர்.
அவரின் கணவர் எம்மி விருது வென்ற தொழில்நுட்ப இயக்குனர் ராபர்ட் பெர். பெலிசியா (82) மூளைப் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அவருக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். தொடர்ந்து ஹாலிவுட் திரைத்துறையினர் அவருக்கு இரங்கல் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.