பாங்காக்: தாய்லாந்து பிரதமர் பதவிக்கான வேட்பாளராக முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் இளைய மகள் பாடோங்டெர்னின் பெயரை ஆளும் பியூ தாய் கட்சி அறிவித்துள்ளது.
ஆசிய நாடான தாய்லாந்தின் பிரதமராக ஷ்ரதா தவிசின் கடந்த ஆகஸ்ட் மாதம் பொறுப்பேற்றார். அவரது அமைச்சரவையில் பிச்சித் சைபன் என்ற வழக்கறிஞர் நியமிக்கப்பட்டார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டதை அடுத்து, அவரது நியமனம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சமீபத்தில் விசாரித்த தாய்லாந்து அரசியல் சாசன நீதிமன்றம், ‘சிறை தண்டனை விதிக்கப்பட்டது தெரிந்திருந்தும், பிச்சிட்டை அமைச்சராக பிரதமர் ஷ்ரத்தா நியமித்துள்ளார்.
அவர் அரசியல் சாசனத்தின் தார்மீக நெறிமுறைகளை மீறியுள்ளதாகவும், இதன் மூலம் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, புதிய பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஆளும் பியூ தாய் கட்சி, கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியது.
நேற்றைய கூட்டத்தில் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் இளைய மகள் படோங்டெர்ன் (37) பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக அந்நாட்டு நாடாளுமன்றம் இன்று கூடுகிறது. அதன்பின், பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படும். இதில் வெற்றி பெற்ற பிறகு பாடோங்டெர்ன் முறைப்படி பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.