அமெரிக்கா: ஈரானை விட்டு உடனடியாக வெளியேறுங்கள் என்று தங்கள் நாட்டு குடிமக்களுக்கு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. இதனால் தாக்குதலுக்கு திட்டமிடுகிறதா என்ற அதிர்ச்சி எழுந்துள்ளது.
ஈரானில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு தங்கள் நாட்டு குடிமக்களுக்கு அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.ஈரானில் பொருளாதார நெருக்கடியால் கடந்த மாதம் அரசுக்கு எதிரான போராட்டம் வெடித்தது. இது வன்முறையாக மாறி 5000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இதற்கிடையே ஈரான் போராட்டக்காரர்களுக்கு உதவ தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வந்தார்.
ஆனால் அமெரிக்க தலையீட்டை ஈரான் அரசு எதிர்த்தது. இதற்கிடையே அமெரிக்க கடற்படை பிரிவு ஈரான் நோக்கி அனுப்பப்பட்டதாக டிரம்ப் கூறியது பதற்றத்தை அதிகரித்தது. ஈரான் தங்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க தயார் என தெரிவித்தது. இருப்பினும் ஒரு நாடுகளும் சூழலை மேலும் தீவிரமடைய செய்யாமல் அமைதி காத்து வருகிறது.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் தெரிவித்தார். ஆனாலும் ஈரான் மீது தாக்குதல் நடத்த டிரம்ப் எந்த நேரத்திலும் டிரம்ப் உத்ராவிடலாம் என்ற பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில் ஈரானில் நிலவும் மிக மோசமான பாதுகாப்பு சூழல் மற்றும் அதிகரித்து வரும் போர்ப் பதற்றம் காரணமாக, அங்குள்ள அமெரிக்கக் குடிமக்களை உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவுத் துறை வலியுறுத்தி உள்ளது.
ஈரானில் இணையதளம் மற்றும் போக்குவரத்து முடக்கம் ஏற்பட்டுள்ளதால், அமெரிக்க அரசு உதவி செய்யும் வரை காத்திருக்காமல் சொந்தமாக வெளியேற வழிகளைத் தேடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளின் குடியுரிமை பெற்றவர்கள் கைது செய்யப்படவோ அல்லது தடுத்து வைக்கப்படவோ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.