பலுசிஸ்தானில் இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற குல்பூஷண் ஜாதவ், மேற்காசிய நாடான ஈரானின் சபாஹரில் ஒரு தொழிலை நடத்தி வந்தார். 2016ஆம் ஆண்டு, அவரை கடத்திய மர்ம கும்பல் ஈரான்-பாகிஸ்தான் எல்லை அருகே, பாகிஸ்தானின் ராணுவத்திடம் ஒப்படைத்தது. பாகிஸ்தான், உளவுப்பார்த்த குற்றச்சாட்டின் பேரில், குல்பூஷண் ஜாதவுக்கு 2017ஆம் ஆண்டில் துாக்கு தண்டனை விதித்தது.

இந்த தண்டனை எதிர்க்க, இந்தியா சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 2019ஆம் ஆண்டில், விசாரித்த நீதிமன்றம் குல்பூஷண் ஜாதவின் துாக்கு தண்டனையை நிறுத்தி வைத்தது. தற்போது, குல்பூஷண் ஜாதவ் பாகிஸ்தான் சிறையில் உள்ளார்.
ஈரானில் இருந்து குல்பூஷண் ஜாதவை கடத்துவதற்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., உதவியது என்பது குறிப்பிடத்தக்க விஷயம். இச்செயலில், அந்நாட்டின் மத போதகர் முப்தி ஷா மிர் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது. இவரது உதவியுடன், குல்பூஷ்ணை கடத்தியதாகவும், அவர் அதற்கான மூளை என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தின்பின்னர், பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள டர்பத் என்ற பகுதியில், கடந்த 7ம் தேதி இரவு, தொழுகைக்கு பின் மசூதியில் இருந்து வெளியேறிய மத போதகர் முப்தி ஷா மிரை, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டு தாக்கப்பட்டு தப்பியோடினார்கள். அவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முப்பத்தி ஓராண்டுகளாக ஐ.எஸ்.ஐ.-க்கு நெருக்கமானவரான முப்தி ஷா மிர், ஆயுதம் மற்றும் மனித கடத்தலில் ஈடுபட்டவர் என்பதுடன், நம் நாட்டின் எல்லைக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ உதவியதாகவும் கூறப்படுகிறது.