பிலிப்பைன்சில் டெங்குவை ஒழிப்பதற்கான ஒரு புதிய முயற்சியாக, 5 கொசுக்களை பிடித்துக் கொடுத்தால், இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு ரூபாய் 50 காசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பிலிப்பைன்சின் மண்டலியோங் நகரின் அடிஷன் மலைக் கிராமத்தில் வந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில், இந்நகரில் 42 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதோடு, இரண்டு மாணவர்கள் உயிரிழந்ததாலும், அந்நாட்டில் அதிர்ச்சி நிலவுகிறது.
டெங்குவை பரவலைத் கட்டுப்படுத்தும் நோக்கில் கிராமத்தலைவர் இந்த புதிய முயற்சியை அறிவித்தார். 5 கொசுக்களை, உயிருடன் அல்லது கொல்லப்பட்ட நிலையில், பிடித்துக் கொடுத்தால், பணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, உள்ளூர் மக்கள் உற்சாகமடைந்து, கொசுக்களை பிடிக்கத் தொடங்கினர்.
இதற்கான செயல்பாட்டால், பலர் வீட்டிலேயே கொசுக்களை வளர்த்து, பணம் சம்பாதிக்க முயற்சி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் விளைவாக, டெங்குவை ஒழிக்க முன்னெடுத்த இந்த முயற்சி, ஒரு முரண்பாடான சூழ்நிலையாக்க மாறியது.