பிரேசில் : இந்தியா அளிக்கும் மிகுந்த ஒத்துழைப்பு… பிரேஸிலுடன் தொழில்நுட்பத் துறையில் இந்தியா மிகுந்த ஒத்துழைப்பு அளிப்பதாக அந்நாட்டு பிரதிநிதி தெரிவித்தார்.
புதுதில்லியில் கார்னகி உலகளாவிய தொழில்நுட்ப உச்சிமாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரேஸிலின் பொது சேவைகள் மேலாண்மை மற்றும் கண்டுபிடிப்பு அமைச்சகத்தின் திட்ட இயக்குநர் கில்ஹெர்ம் அல்மெய்டா தெரிவித்ததாவது:
வனப் பாதுகாப்புக்கான உள்கட்டமைப்புகளை பிரேஸில் செயல்படுத்தி வருகிறது. விவசாயம் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியாவும் பிரேஸிலும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன.
நாம் ஒன்றிணைந்து செயல்படும்போது, நமது தகவல்களை வெளிப்படையாகத் தெரிவிக்கவும், வெவ்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தவும் முடியும்.
சமூகம், வளர்ச்சி, அதிக நிலைத்தன்மையுடன் உலகம் இயங்குவது எப்படி? என்பது குறித்து இரு நாடுகளுக்கு ஒத்த கருத்துகளே உள்ளன. பல்வேறு அம்சங்களில் பிரேஸில் மற்றும் இந்தியாவுக்கும் இடையே நிலையான ஒத்துழைப்பு உள்ளது. இப்போது ஒரு வருடத்துக்கும்மேலாக இந்தியாவுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்.
காடுகளைப் பாதுகாக்க உதவும் தொழில்நுட்பங்கள், அணுகுமுறைகளை நாங்கள் இணைந்து ஆராய்ந்து வருகிறோம். இரு நாடுகளிலும் தொழில்நுட்பம் முக்கியமான ஒன்றாகும். பிரேஸில் மற்றும் இந்தியாவின் ஒத்துழைப்பு செழுமையாக இருக்கிறது என்று கூறினார்.