அஸ்தானா: இந்தியா-சீனா இடையேயான உறவில் விரிசல் நிலவி வரும் நிலையில், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீன அமைச்சர் வாங் யியை கஜகஸ்தானில் இன்று (ஜூலை 04) சந்தித்துப் பேசினார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 24வது உச்சி மாநாடு கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் நேற்று (ஜூலை 03) தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சென்றுள்ளார்.
இன்று (ஜூலை 04) ஜெய்சங்கர் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யியை சந்தித்தார்.
இந்தியா – சீனா இடையே எல்லைப் பிரச்னை நீடித்து வரும் நிலையில், இரு நாட்டுத் தலைவர்களும் நேரில் சந்தித்துப் பேசினர்.
புகைப்படம் எடுக்கும் முன் இருவரும் கைகுலுக்கினர். அப்போது, எல்லை பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து இரு நாட்டு தலைவர்களும் சிறிது நேரம் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.