இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் வானொலிகளில் இந்திய பாடல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் வானொலிகளில் இந்திய பாடல்கள் ஒலிபரப்பப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. பாக்., ஒலிபரப்பாளர்கள் சங்கம் கேட்டுக் கொண்டதற்கிணங்க அனைத்து வானொலி நிலையங்களும் உடனடியாக நிறுத்தியுள்ளன.
இதனை ‘தேசப்பற்று’ என அந்நாட்டின் தகவல் துறை அமைச்சர் அட்டா தரார் பாராட்டியுள்ளார். பஹல்காம் தாக்குதலை அடுத்து, இந்தியாவிலும் பாக்., நடிகர்களின் படங்களுக்கு தடை, யூடியூப் சேனல்கள், X தளங்கள் ஆகியவை முடக்கப்பட்டுள்ளன.
இந்தியா பாகிஸ்தான் உறவில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக எல்லைப் பகுதியில் பதட்டம் நீடித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.