கனடா: கனடாவில் ஓடும் மிசி சவுக்கா நதியில் கனடாவால் கங்கா ஆரத்தி வழிபாடு நடத்தினர். இதனால் கனடா நதியை இந்தியர்கள் களங்கப்படுத்தியதாக எதிர்ப்பு குரல்கள் இருந்துள்ளது.
காசியில் கங்கா ஆரத்தி பிரசித்தி பெற்ற ஒன்று. இந்நிலையில், கனடா வாழ் இந்தியர்கள், அங்குள்ள மிஸிசவுகா நதியில் இதேபோன்ற வழிபாட்டை மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் பாரம்பரிய உடை அணிந்து தீபம் ஏற்றி வழிபட்டனர். இதுதொடர்பான செய்தி வைரலாகவே, இந்திய கலாசாரம் உலகெங்கும் பரவிக் கிடக்கிறது என ஆதரவு கிடைத்தது.
இருப்பினும் அதே வேளையில், கனடாவில் நதியை இந்தியர்கள் மாசுபடுத்துவதாக ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும் இந்திய கலாச்சாரம் எங்கும் பரவி உள்ளது என்பதற்கு இதுவும் ஒரு சாட்சியாகும்.