ஜெருசலேம்: இஸ்ரேல்-ஈரான் போர்மூலமான சூழலில், அந்நாட்டில் இருந்த 160 பேர் கொண்ட முதல் இந்தியர் குழு, ‘ஆபரேஷன் சிந்து’ நடவடிக்கையின் கீழ் தாயகம் புறப்பட்டுள்ளதாக இந்திய துாதரகம் அறிவித்துள்ளது.
ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் இருந்து தப்பிக்க, இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புக வேண்டிய நிலை ஏற்பட்டது. விமான சேவைகள் நிறுத்தப்பட்டதால் அவர்கள் வெளிநாடு செல்ல முடியாமல் சிக்கியிருந்தனர்.
இந்த சூழலில், இந்தியா நடைமுறைப்படுத்திய ஆபரேஷன் சிந்து திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக 160 பேர் பாதுகாப்பாக புறப்பட்டு ஜோர்டான் எல்லையை அடைந்துள்ளனர்.
இந்த செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும், இஸ்ரேலில் மீதமுள்ள இந்தியர்களும் விரைவில் மீட்கப்படுவார்கள் எனவும் இந்திய தூதரகம் உறுதிபடுத்தியுள்ளது.