ஈரான்: ஈரான் தலைநகர் டெஹ்ரானை குறி வைத்து அமெரிக்கா தாக்குதலை தொடங்கியுள்ளது
இஸ்ரேலை தொடர்ந்து அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் தொடுத்துள்ளது. அமெரிக்காவும், இஸ்ரேலும் ஒரே நேரத்தில் ஏவுகணைகளை வீசி ஈரான் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள அதிபர் மாளிகையை குறி வைத்து இஸ்ரேலும், அமெரிக்காவும் தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அல் கமேனி பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும் கமேனி இறந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்க விமானப்படை விமானங்கள் ஈரானை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்குள் நுழைந்து அமெரிக்க போர் விமானங்கள் குண்டுகளை வீசி வருகின்றன. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்தி வரும் தாக்குதலில் ஈரானில் சுமார் 1000 பேர் பலி என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.