காசாவில் 2023ம் ஆண்டில் தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர் இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்தது. இதற்கிடையில் 60,000க்கும் மேலான பொதுமக்கள் உயிரிழந்தனர். பல்வேறு தரப்புகள் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், அமெரிக்கா முன்வைத்த போர் நிறுத்த தீர்மானத்தை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இருவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இன்று எகிப்தில் இரு தரப்பும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர். ஹமாஸ், கைது செய்யப்பட்ட இஸ்ரேலியர்களை விடுவிப்பதாகவும், பதிலுக்கு பாலஸ்தீனர்களை விடுவிக்கப்படும் என அறிவித்துள்ளது.

போர் தொடங்கிய காரணம், ஹமாஸ் கடந்த 2023ம் ஆண்டு அக்.7ம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல், ஹமாஸை அழிப்பதுதான் நோக்கம் என கூறினாலும், பெரும்பாலான உயிரிழப்புகள் அப்பாவி பொதுமக்கள்தான். சர்வதேச அழுத்தத்தால் இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டுள்ளது.
பேச்சுவார்த்தை வெற்றி பெற்றால், போர் நிறுத்தம் நிரந்தரமாக அமையும். அமெரிக்கா முன்மொழிந்த தீர்மானம் மூலம், இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான அமைதி நோக்கி முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதனால், காசாவில் பொதுமக்கள் மீண்டும் பாதுகாப்பாக வாழக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.