இஸ்ரேல்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு காசா நகருக்கு வருகை தந்துள்ளார். மேலும் பயண கைதிகளை கண்டுபிடித்து இஸ்ரேலிடம் ஒப்படைப்பவர்களுக்கு ரூ.42 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் ஈரான் அணு சக்தி கட்டமைப்பை குறிவைத்து தாக்குதல் நடத்தியதை ஒப்புக்கொண்ட நேதன்யாகு தெற்காசியாவில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலுக்கு மத்தியில் காசாவுக்கு திடீர் வருகை தந்துள்ளது முக்கியத்துவமானதாகப் பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் மற்றும் ராணுவ தளபதியுடன் பாதுகாப்பு கவசம், பாலிஸ்டிக் ஹெல்மெட் சகிதம் காசாவில் நேதன்யாகு சுற்றிப்பார்த்த வீடியோவை இஸ்ரேல் பகிர்ந்துள்ளது.
ஹமாஸ் கடத்திச்சென்ற பணயக் கைதிகள் 250 பேரில் 101 பேர் இன்னும் மீட்கப்படாமல் உள்ளனர். எனவே பணய கைதிகளை கண்டுபிடித்து இஸ்ரேலிடம் ஒப்படைப்பவர்களுக்கு ஒவ்வொரு பணய கைதிக்கும் தலா 5 மில்லியன் டாலர்கள் என்ற அடிப்படையில் [இந்திய மதிப்பில் 42 கோடி ரூபாய்] சன்மானம் அளிக்கப்படும் என்று காசா சென்ற நேதன்யாகு அறிவித்துள்ளார்.
பணய கைதியை எங்களிடம் ஒப்படைக்கும் நபரின் அடையாளம் பாதுகாக்கப்படும். அந்த நபர் குடும்பத்துடன் காசாவில் இருந்து பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல இஸ்ரேல் அழைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.