இஸ்ரேல்: லெபனானில் ஹெஸ்புல்லா நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரான் மீதான தாக்குதலை தொடர்ந்து அண்டை நாடான லெபனானை குறிவைத்தும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
ஈரான் ஆதரவு பெற்ற ஹெஸ்புல்லா நிலைகளை குறிவைத்து கடந்த 2ஆம் தேதி தொடங்கப்பட்ட தாக்குதலில் உச்சமாக தலைநகர் பெய்ரூட்டில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் கட்டிடம் ஒன்று சரிந்து தரைமட்டானது.
தெற்கு லெபனானில் தரைப்படையை அனுப்பி ஹெஸ்புல்லாவின் 80-க்கும் மேற்பட்ட தளங்களை அழித்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.