சிங்கப்பூர்: ஆசிய நாடான சிங்கப்பூரில் அமைச்சராக இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஈஸ்வரன், 62, அமைச்சராக இருந்தபோது, 2.60 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுகளை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர் தனது 60வது பிறந்தநாளை கொண்டாடியபோது இசை நிகழ்ச்சிகள், கார் ரேஸ் மற்றும் கால்பந்து போட்டிகளுக்கான டிக்கெட்டுகளையும், மதுபானம், சைக்கிள் போன்றவற்றையும் வாங்கியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான விசாரணையின் போது அவர் இதனை ஒப்புக்கொண்டார். அவர் செய்த குற்றத்திற்காக, அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவரை சிங்கப்பூர் சிறைத்துறை அதிகாரிகள் நேற்று சிறையில் அடைத்தனர். அவரது பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவருக்கு தனி சிறை ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சிறையின் பரப்பளவு 74 சதுர அடி. அவருக்கு ஒரு பாய் மற்றும் இரண்டு போர்வைகள் வழங்கப்படும். வாரம் இருமுறை குடும்பத்தைப் பார்க்கவும். மேலும், நான்கு மின்னணு கடிதங்களை அனுப்பலாம்.