இங்கிலாந்து: காலால் மிதித்து தயாரிக்கப்படும் சிம்ப் ஒயின் விலையை கேட்டால் அதிர்ச்சிதான் ஏற்படும்.
உலகெங்கிலும் உள்ள மது பிரியர்களுக்கு விருப்பப்படும் பானமாக ஒயின் உள்ளது. மது அருந்துபவர்கள் ஒயினின் சுவைக்காக எவ்வளவு விலைக் கொடுத்தும் வாங்கி அருந்துகின்றனர்.
இந்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த 30 வயதான எமிலி ரே என்ற மாடல் தனது கால்களால் நசுக்கப்பட்ட திராட்சைகளால செய்யப்பட்ட ஒயின் சுவையை பலர் விரும்புவதாகக் கூறியுள்ளார்.
எமிலி கால் மாடலாக புகழ் பெற்றவர். எமிலி வெறும் கால்களால் திராட்சை பழங்களை நசுக்கி அதில் மது மது தயாரிக்கிறார். சொந்தமாக ஒரு ஒயின் பிராண்டை ஆரம்பித்து அதற்கு சிம்ப் ஒயின் என்றும் பெயரிட்டுள்ளார்.
இந்நிலையில் கூட்டு ஒயின் திட்டத்திற்காக ரெனிகேட் அர்பன் வைனரி என்ற லண்டனை தளத்தை ஒயின் தயாரிக்கும் மாடல் எமிலி தொடர்பு கொண்டார். அவர் சமீபத்தில் ஒரு வரையறுக்கப்பட்ட பதிப்பு மதுவை அறிமுகப்படுத்தி உள்ளார். திராட்சைகளை தனது கால்களால் நசுக்கி தயாரிக்கப்படுகிறது. அந்த ஒயின் ஒரு பாட்டிலின் விலை சுமார் 100 பவுண்டுகள் (தோராயமாக ரூ. 10,662). என்று தெரிவித்துள்ளார்.
“ஒவ்வொரு பாட்டிலிலும் எனது பாதத்தின் ஒரு சிறிய பகுதி உள்ளது, அதைத்தான் கால் ரசிகர்கள் விரும்புவார்கள் என்று நான் நினைக்கிறேன்” என்றும் கூறியுள்ளார்.