ஜப்பானின் விவசாய அமைச்சர் டகு எட்டோ, அரிசி தொடர்பான சர்ச்சைக்குப் பிறகு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஜப்பானில் அரிசியின் விலை இந்த ஆண்டு பெரிதும் உயர்ந்தது. இதன் காரணமாக அரசாங்கம் அவசரகால அரிசி இருப்புகளை வெளியிட்டது மற்றும் வெளிநாட்டிலிருந்து அரிசி இறக்குமதி செய்யும் நடவடிக்கைகளை எடுத்தது.

இந்நிலையில், டகு எட்டோ, “அரிசிக்கு ஒருபோதும் பணம் செலுத்த வேண்டியதில்லை” எனக் கூறினார். மேலும், “நான் ஒருபோதும் அரிசி வாங்கியதில்லை. என் ஆதரவாளர்கள் எனக்கு அரிசி தருகிறார்கள். எனவே என் வீட்டில் இருப்பதை விற்றுக்கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.
இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் தீவிர விமர்சனங்களை ஏற்படுத்தியது. பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தேர்தலை முன்நோக்கிய அரசாங்கத்திற்கு இது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. பிரதமர் ஷிகெரு இஷிபாவின் தலைமையிலான அரசுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.
இதையடுத்து, டகு எட்டோ இன்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பதவியை விட்டதற்கான காரணமாக, அவர் கூறியதாவது: “இந்தப் பதவிக்கு நான் சரியான நபர் அல்ல என்பதால் ராஜினாமா செய்கிறேன். அரிசி வாங்கிய விவகாரம் குறித்து தெளிவுபடுத்தியுள்ளேன். என் கருத்துகள் காரணமாக மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு வருந்துகிறேன்” என தெரிவித்தார்.
அவரது ராஜினாமா தற்போது அரசியல் வட்டாரத்தில் தீவிர விவாதத்திற்கு காரணமாகியுள்ளது.