வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கு ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் நட்சத்திரம் லியோனார்டோ டிகாப்ரியோ ஆதரவு தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ம் தேதி நடைபெறவுள்ளது.அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.
தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இரண்டு ஜனாதிபதி வேட்பாளர்களும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆரம்பத்தில் கமலாவுக்கு ஆதரவு அதிகமாக இருந்த நிலையில் தற்போது அது குறைந்து வருகிறது.
இந்நிலையில், ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் நட்சத்திரம், டைட்டானிக் ஹீரோ லியோனார்டோ டிகாப்ரியோ ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். லியோனார்டோ டிகாப்ரியோ தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “காலநிலை மாற்றம் கவலையளிக்கிறது. எந்த தவறும் செய்யாதீர்கள்: இந்த இயற்கைக்கு மாறான பேரழிவுகள் காலநிலை மாற்றத்தால் ஏற்படுகின்றன.”
“நமது பொருளாதாரம், நமது கிரகம் மற்றும் நம்மைக் காப்பாற்ற நாம் ஒரு துணிச்சலான நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று அவர் கூறினார். அதனால்தான் கமலா ஹாரிஸுக்கு வாக்களிக்க விரும்புகிறேன். நவம்பர் 5 ஆம் தேதி கமலா ஹாரிஸை உற்சாகப்படுத்த என்னுடன் சேருங்கள். 2050-க்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைவதற்கான கமலாவின் லட்சிய இலக்குகளைப் பாராட்டுவதாக அவர் கூறினார்.
இந்த ஆதரவு தேர்தல் நேரத்தில் கமலா ஹாரிஸுக்கு ஒரு முக்கிய ஊக்கத்தை அளிக்கலாம். காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.
இந்நிலையில், சமீபகாலமாக தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் முடிவில் பிரபலங்களின் ஒப்புதல் முக்கிய பங்கு வகிக்கிறது. கமலா ஹாரிஸ் தனது இலக்குகளை அடைவதற்கான தனது முயற்சிகளைத் தொடர்ந்தால், இது அவரது பிரச்சாரத்திற்கு நல்ல பலனைத் தரும்.