வங்கதேசம்: பெரும் கலவரம்… வங்க தேசத்தில் மாணவர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையேயான மோதல் பெரும் கலவரமாக மாறியுள்ளது. 105 பேர் உயிரிழந்த நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டாக்கா, சிட்டோகிராம், ரங்பூர், குமில்லா உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
தலைநகர் டாக்காவில் பொதுக்கூட்டம், ஊர்வலம் உள்ளிட்டவை நடத்த போலீசார் தடை விதித்துள்ளனர்.
நர்சிங்டி மாவட்டத்தில் உள்ள சிறைக்கு கைதிகள் தீவைத்தனர். நூற்றுக்கணக்கான கைதிகள் தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என மாணவர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், வங்கதேசத்தில் படித்துவந்த இந்திய மாணவர்களில் 300-க்கும் மேற்பட்டோர் நாடு திரும்பியுள்ளனர். அரசுப் பணிகளில் இட ஒதுக்கீட்டை ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கொண்டு வந்தது. இந்த இட ஒதுக்கீடு பாரபட்சமானது என்றும், சமூகத்தில் ஒரு பிரிவினருக்கு அதிகப் பலன் அளிக்கும் வகையில் இருப்பதாகவும் கூறி, ஜூலை ஒன்றாம் தேதி முதல் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.