இஸ்ரேல்: இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதலை ஈரான் நடத்தியுள்ளது.
அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேலும், ஈரானும் தொடர்ந்து பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தினார். ஆனால் போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தற்போது வாய்ப்பில்லை என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இஸ்ரேலின் டெல் அவீவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் தூதரகம் சேதமடைந்துள்ளதால் இன்று தற்காலிகமாக மூடப்படுவதாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்கபி தெரிவித்துள்ளார்